• Jul 24 2025

தனுஷின் வாத்தி பட திரைவிமர்சனம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் தமிழில் வாத்தி என்ற தலைப்பிலும் தெலுங்கில் சார் என்ற தலைப்பிலும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக நடித்துள்ளார்.அந்த வகையில் இப்படம் எப்படி இருக்கு என்று வாங்க பார்க்கலாம்.

கதைக்களம்

ஒரு சாதாரண ஆள் மக்களை காக்கும் வேலையில் ஈடுபட்டு பெரிய ஹீரோவாக மாறும் கதைக்கு எப்பொழுதுமே வரவேற்பு உண்டு. தனுஷின் வாத்தி படமும் அத்தகைய கதை கொண்டது தான். அவர்கள் சொல்லியிருக்கும் கருத்து நன்றாக இருக்கிறது.


3 மாணவர்களோடு ஒரு வித்தியாசமான நபரை காட்டுவதுடன் படம் ஆரம்பிக்கின்றது. அந்த நபர் கணக்கு வாத்தியார் பாலா(தனுஷ்) என்பதும், 90களில் நடந்த கல்வியை தனியார் மயக்குமாக்குதல் பிரச்சனையில் சிக்கியவர் என்பதும் தெரிய வருகிறது.  பெற்றோர் மற்றும் நிர்வாகத்தின் ஆதரவு இல்லாத அரசு பள்ளியில் தன் திறமையை காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறார் பாலா.தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கையை கல்வி மூலம் எப்படி மாற்றுகிறார் என்பது தான் கதையின் கரு. 

படம் பற்றிய அலசல்.

இந்த கதை ரொம்ப பழையது தான் என்றாலும் அதை கையாண்ட விதம் தான் அருமை. பழைய கதையை தற்போது உள்ள ரசிகர்களுக்கு ஏற்றது போன்று கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.மேலும் தனுஷ் படத்தை தன் தோள்களில் தாங்கி சூப்பராக நடித்திருக்கிறார் என்பதை விட பாலாவாகவே வாழ்ந்திருக்கின்றார்.


மாணர்களை படிக்க வைக்க தனுஷ் சொல்லும் புதுப் புது ஐடியாக்கள் ரசிக்கும்படி இருக்கிறது. சமூகத்தில் சமநிலை வேண்டும் என்று தனுஷ் பேசும் வசனங்கள் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சம்யுக்தா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். தனுஷ், சம்யுக்தா இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. கென் கருணாஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். பிற மாணவர்களின் நடிப்பையும் பாராட்ட வேண்டும்.வில்லனாக வரும் சமுத்திரக்கனிக்கு தன் வில்லத்தனத்தை காட்ட அதிக காட்சிகள் இல்லை எனலாம். 


மேலும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றது.அத்தோடு நமது பள்ளிக் காலத்தை நினைவுபடுத்துவதாக வாத்தி படம அமைந்திருக்கின்றது எனலாம். மொத்தத்தில் வாத்தி படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம்.





Advertisement

Advertisement