• Jul 25 2025

வாத்தி திரைப்படத்தின் முதல் வசூல் இத்தனை கோடி தாண்டுமா?- பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் செய்யப்போகும் தனுஷ்..

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள வாத்தி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில், முதல் நாளில் மிகப்பெரிய தொகையை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் நடிகராக தனுஷ் அறிமுகமான நிலையில், ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான தி கிரேமேன் படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கடந்த ஆண்டு அறிமுகமானார். ஏற்கனவே பிரெஞ்சு மொழி படமான பக்கிரி படத்திலும் தனுஷ் நடித்திருந்த நிலையில், தற்போது தெலுங்கில் Sir படம் மூலம் அறிமுகமாகி உள்ளார்.


தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படமாக இன்று வெளியாகி உள்ள வாத்தி படத்திற்கு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் உள்ளது. கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வாத்தி திரைப்படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில், இன்று வெளியாகி உள்ளது. தேவையற்ற காட்சிகளை ட்ரிம் செய்து வெறும் 2 மணி நேரம் 19 நிமிடங்களே ஓடும் படமாக வாத்தி வெளியாகி உள்ளது .

தனுஷின் வாத்தி படத்தின் அட்வான்ஸ் புக்கிங் வியாழன் இரவு 10 மணி வரை 1.5 கோடியாக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கில் வாத்தி படத்தை மிகப்பெரிய அளவில் திரையிட்டுள்ள நிலையில், முதல் நாளில் வாத்தி திரைப்படம் நிச்சயம் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதன்படி வாத்தி திரைப்படம் முதல் நாளில் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனை சேர்த்து 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி நடிகர்களான விஜய், அஜித் படங்கள் முதல் நாளில் 28 முதல் 30 கோடி வரை வசூல் செய்து வரும் நிலையில், தனுஷின் வாத்தி 20 கோடி வசூல் செய்தாலே மிகப்பெரிய விஷயம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement