• Jul 24 2025

துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் தாமதம்... டுவிட்டரில் கலாய்த்த ரசிகர்... காட்டமாக பதிலளித்த இயக்குனர்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம்  நடிப்பில் வெளியாக உள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்து கலாய்த்து ரசிகர் போட்ட டுவிட்  பதிவுக்கு இயக்குனர் கௌதம் மேனன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.


இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் இன்னும் சில காலங்களில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம் . இத்திரைப்படம் 3 ஆண்டுகளாக திரையில் ரிலீஸ் ஆகாமல் இழுபறிநிலையில் இருந்தது. தற்போது அதன் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதன் ரசிகர் விமர்சனங்களுக்கு பதில் எழுதி இயக்குனர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் செய்ய தாமதமாவதை விமர்சித்து டுவிட்டரி பக்கத்தில் பதிவிட்டிருந்த ரசிகர் ஒருவருக்கு இயக்குனர் கௌதம் மேனன் இவ்வாறு பதிலளித்தார்.


ரசிகர் டுவிட்டரில் துருவ நட்சத்திர திரைப்படம் நான் பாடசாலை செல்லும் போது ஆரம்பிக்கபட்டதாகவும் , தற்போது 3 வருடமாகி தான் வேலை செய்வதாகவும் இன்னும் இப்படம் ரிலீஸ் செய்ய செய்யபடவில்லை என்றும் கிண்டலாக கூறியிருந்தார்.  அதற்கு  இயக்குனர்  அதன்பிறகு நிறைய கற்றுக்கொண்டேன், நான் 3 படங்கள், 4 ஆந்தாலஜி குறும்படங்கள், 5 மியூசிக் வீடியோக்களை இயக்கி வெளியிட்டேன், மேலும் 6வது அறிவை வளர்த்துக் கொண்டேன் என காட்டமாக பதிலளித்துள்ளார்.

Advertisement

Advertisement