• Jul 25 2025

லவ் டாச்சர் பண்ணியே சைக்கோவாகும் மாலினி.? செழியன் வாழ்க்கையையும் கெடுக்கும் கோபி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. குடும்பத் தலைவியான பாக்கியாவுக்கு ஏற்படும் குடும்ப பிரச்சனைகள், வேலைக்கு வரும் தடைகள் என யாவற்றையும் வெற்றிகரமாக சமாளித்து செல்லும் அவருடைய கதாப்பாத்திரம் காணப்படுகிறது.

இந்த நிலையில், பாக்கியாவின் வாழ்க்கையை தொடர்ந்து, அவருடைய பிள்ளைகளின் வாழ்க்கையிலும் தொடர் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த வகையில், தற்போது செழியனின் வாழ்க்கை பெரும் இக்கட்டான சூழ்நிலையில் காணப்படுகிறது.


அதன்படி, ஒரு குழந்தைக்கு அப்பாவான செழியனை விரட்டி விரட்டி காதலிக்கிறார் மாலினி. இதனிடையே பாக்கிய வீட்டிற்கு செல்லும் மாலினி ஜெனியின் குழந்தையை மறைத்து வைத்து விளையாடுகிறார். இதை பார்த்த நேயர்கள் மாலினி என்ன சைக்கோவா? இல்ல அவளுக்கு பைத்தியம் பிடிச்சிட்டா என தீட்டித் தீர்த்துள்ளனர்.

எனினும், மாலினி செழியனை விடுவதாக இல்லை. இவ்வாறான நிலையில் செழியன் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டுள்ளார்.

இதேவேளை, மாலினிக்கு பேசும் பாக்கியாவிற்கு எதிராக பேசுகிறார் கோபி. எனவே,  இனி வரும் நாட்களில் கதை எப்படி நகரும் என பொறுத்திருந்து பார்ப்போம்.








Advertisement

Advertisement