• Jul 25 2025

மூன்று வேளை எடுத்ததை இப்போது 6 வேளையாக மாற்றி விட்டாரா?- வனிதாவின் உடல் எடை குறைய இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் விஜயகுமாரின் மூத்த மகள் தான் வனிதா. இவர் ஆரம்பத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை. இதனால் திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்டார். ஆனால் இவரது திருமண வாழ்வும் முடிவுக்கு வந்தது.

இதனை அடுத்து பல சர்ச்சைகளைச் சந்தித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து கொண்டதன் மூலமே மக்களிடம் மிகவும் பிரபல்யமானார். இதன் மூலம் மீண்டும் சினிமாவில் நுழைந்து இப்போது கலக்கி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், சீரியல்களில் சிறப்பு வேடம், படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார்.


இதுதவிர சொந்தமாக நிறைய தொழில்களும் செய்து வருகிறார்.உடல் எடை குறைக்க முடிவு செய்ததும் வெள்ளை உணவுகளான அரிசி, சர்க்கரை, பால், தயிர் போன்றவற்றை சுத்தமாக நிறுத்திவிட்டாராம்.

வெறும் வயிற்றில் பாகற்காய் ஜுஸ் குடிப்பது உடல் எடையை குறைக்க மிகவும் உதவுமாம். உடலில் இருக்கும் கொழுப்பு, தொப்பையை குறைக்க வெந்நீரில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பாராம்.


3 வேளை உணவை 6 வேளையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவாராம்.தானிய வகைகளான பிரவுன் ரைஸ், கம்பு, குதிரைவாலி, ராகி போன்ற உணவுகளை இரவில் எடுத்துக் கொள்வாராம். இதன் மூலம் தான் தன்னுடைய உடல் எடையைக் குறைத்துக் கொண்டாராம் என்று கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement