• Jul 24 2025

மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்தது இந்த பிரபலம் தானா?- ஆமாம்ல இந்த படத்திலும் நடிச்சிருக்கிறார் தானே

stella / 2 years ago

Advertisement

Listen News!

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி மக்களிடம் இருந்து நல்ல விமர்சனத்தை பெற்று வரும் திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்தில் உதயநிதி மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றது.

இப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் கீதா கைலாசம். இவர் இதற்கு முதல் ர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில்  பசுபதியின் மனைவியாக ஒரு சில காட்சிகள் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து வீட்ல விசேஷம் படத்தில் செவிலியராக நடித்திருந்தார்.


மாமன்னன் படத்தின் மொத்த கதையை தோளில் தூக்கி சுமந்தாக வடிவேலுக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் கீதா கைலாசம்.மகன் உதயநிதியை நினைத்து வருத்தப்படுவது, கணவர் வடிவேலுவை மாமா மாமா என அழைப்பது என, அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.


 கிளைமாக்ஸ் காட்சியில் ரௌடிகள் வீட்டை அடித்து நொறுக்கும் போது,பயந்து போய் கட்டிலுக்கு அடியில் பயந்தோடு ஒளிந்து இருக்கும் காட்சியில், ஒடுக்கப்பட்ட மக்களின், வலியையும் கண்முன் கொண்டுவந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அண்மையில் இவர் அளித்த பேட்டியில் வடிவேலுவுடன் நடிப்பது பயமாகவும்,சவாலாகவும் இருந்தது என்று கூறியிருந்தார்.


Advertisement

Advertisement