• Jul 25 2025

ஜனனி மற்றும் அமுதவாணன் Code word யூஸ் பண்ணாங்களா- பரபரப்பை கிளப்பிய நாமினேஷன்..கமல் சேர் கேட்பாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸில் 21 போட்டியாளர்கள் பங்குபற்றிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 11 போட்டியாளர்கள் மாத்திரமே உள்ளனர். இந்த வாரம் மபுள் எவிக்ஷன் இருப்பதால் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்படுகின்றது.

அப்படி ஒரு சூழலில் தற்போது ஜனனி மற்றும் அமுதவாணன் ஆகியோர் நாமினேஷன் செய்தது தொடர்பான விஷயம் ஒன்று தற்போது பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.


முன்னதாக இந்த நிகழ்ச்சியில், அமுதவாணன் வில்லாகவும், ஜனனி அம்பாகவும் செயல்படுவதாக சில போட்டியாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த வார எலிமினேஷன் முன்பாக ஜனனி மற்றும் அமுதவாணன் ஆகியோர் யாரை நாமினேட் செய்வது என்பது பற்றி Code Word பயன்படுத்தி பேசியதாக ஒரு விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது.

ஜனனி, அமுதவாணன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் உணவருந்திக் கொண்டிருக்கும் சமயத்தில் யாரை நாமினேட் செய்வது என்பது பற்றி தெரியாமல் இருப்பதாக ஜனனி கூறுகிறார். அப்போது அமுதவாணன், "ஆயிஷா எங்க காணோம்?" என கூறுகிறார். இதனைக் கேட்டதும் ஜனனி சிரிக்க, "ADK சாப்பிட்டாரா?" என தனலட்சுமி கேட்கிறார்.


இதனைத் தொடர்ந்து, "கதிர் பக்கத்துல இருக்கிறான்" என ஜனனி சிரித்து கொண்டே கூறுகிறார். இதன் பின்னர், இரண்டு போட்டியாளர்களை நாமினேட் செய்யும் சமயத்தில் அமுதவாணன் மற்றும் ஜனனி ஆகியோர் தாங்கள் சாப்பிடும் நேரத்தில் குறிப்பிட்ட ஆயிஷா மற்றும் கதிரவன் ஆகியோரின் பெயர்களை தான் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வரும் நிலையில், Code வார்த்தைகளை பயன்படுத்தி அமுதவாணன் மற்றும் ஜனனி ஆகியோர் நாமினேஷன் செய்ய போகும் பெயர்களை தெரிவித்தததாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.












Advertisement

Advertisement