• Jul 25 2025

நாக சைதன்யா, சித்தார்த்துக்கு முன் சமந்தா இவரை தான் காதலித்துள்ளாரா..? வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்பவர் தான் சமந்தா.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் அடித்துவிடும்.

இவ்வாறுஇருக்கையில் இவர் திரையுலகில் பிரபலமாக இருந்தபோது நடிகர் சித்தார்த்தை காதலித்தது திரையுலகினர் அனைவரும் அறிந்ததே. இதன்பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக பிரிந்துவிட்டனர். மேலும் சித்தார்த்துடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பின் நடிகர் நாக சைதன்யாவை காதலித்தார் நடிகை  சமந்தா.



அத்தோடு தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 4 ஆண்டுகள் நீடித்த இந்த காதல் திருமணம் கடந்த ஆண்டு தீடீரென விவாகரத்தில் முடிவுக்கு வந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.



இந்நிலையில், சித்தார்த், நாக சைதன்யா இருவரையும் காதலிப்பதற்கு முன் நடிகை சமந்தா வேறொரு நபர் ஒருவரை காதலித்துள்ளார்.

இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தும் உள்ளார். அந்த பதிவில் தனக்கு பிடித்த இடத்தை குறிப்பிட்டு, இந்த இடத்தில் நடந்த மறக்க முடியாத விஷயங்களையும் குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்றாக தன்னுடைய முதல் காதலும் இங்கு தான் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.




Advertisement

Advertisement