• Jul 24 2025

யார் நீங்க என கேட்ட தொகுப்பாளர்... நெட்டிசன்களின் மனதை வென்ற ரன்வீர் சிங்கின் பதில்!

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

ரன்வீர் சிங் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் 2010ம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.


மேலும் ரன்வீர் சிங் ஜூலை 6, 1985ம் ஆண்டு, மும்பை இந்தியாவில் பிறந்தார். இவரின் தந்தை ஜக்ஜித் சிங் மற்றும் அஞ்சு பாவ்னனி. இவருக்கு ரித்திகா என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு.


இந்நிலையில் தொகுப்பாளரிடம் தான் ஒரு பாலிவுட் நடிகர் என ரன்வீர் சிங் அறிமுகப்படுத்திக் கொண்டது நெட்டிசன்களின் மனதை வென்றுள்ளது.ரன்வீர் சிங் சமீபத்தில் அபுதாபியின் யாஸ் தீவில் நடந்த ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் இந்திய பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.


அப்போது நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது ரன்வீர் யார் என்பதை மறந்த மார்ட்டின், உங்களை நீங்களே அறிமுகம் செய்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.


அதற்கு, “நான் ஒரு பாலிவுட் நடிகர் சார். பொழுதுபோக்கு துறையைச் சார்ந்தவன். இந்தியாவின் மும்பையை சேர்ந்தவன்” என பதிலளித்தார்.


ரன்வீர் சிங்கின் இந்த தன்னடக்கமான பதில் நெட்டிசன்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.


Advertisement

Advertisement