• Jul 25 2025

சம்யுக்தா டபிள் கேம் ஆடினரா?- அவரது அம்மாவே கொடுத்த விளக்கம்- இதெல்லாம் உண்மை தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்தபோது காதலித்து வந்தவர்கள் தான்  சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் .பின்னர் கடந்த மார்ச் மாதம் இந்த ஜோடிக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமான இரண்டே மாதத்தில் தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இருவருமே நீக்கினார். 

இதனால் இவர் இருவரும் பிரிந்துவிட்டார்களா என்கிற ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இன்ஸ்டாகிராம் லைவ்வில் தாங்கள் பிரிந்துவிட்டதை தனித்தனியாக அறிவித்ததோடு, இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.


 சம்யுக்தாவின் தந்தை அடிக்கடி வீட்டுக்கு வருவதால் தான் தங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக விஷ்ணுகாந்த் கூறினார்.சம்யுக்தா ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் காதலில் இருந்தார் என ஆடியோ ஆதாரத்தை விஷ்ணுகாந்த் தரப்பு சமீபத்தில் ஆடியோ வெளியிட்டு இருந்தது.விஷ்ணுகாந்த உடன் காதலில் இருக்கும்போதே ஏன் ரவி உடன் பேசிக்கொண்டிருந்தாய் என ஒரு நபர் கேட்க, 'அவர் என்னிடம் தவறாக நடந்தார்.


 அதை அவர் வாயாலேயே ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்று தான் பேசினேன்' என சம்யுக்தா பதில் கூறினார். இவ்வாறு இருக்க சம்யுக்தாவின் அம்மா இது குறித்து பேசியுள்ளார அதில் அவர் கூறியதாவது சம்யுக்தா ஏன் இப்படி பண்ணுறா என்று தெரில நீங்களே போன் பண்ணிக் கேளுங்க. எங்கிட்ட அவ போன் தந்ததே கிடையாது. இது குறித்து பேசினதும் கிடையாது. இது சம்மந்தமாக ஏதாவது கேட்கணும் என்றால் அவ கிட்டையே கேளுங்க என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement