• Jul 25 2025

தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல- புது விளக்கம் கொடுத்த கமல்ஹாசன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. அடா சர்மா, சித்தி இத்னானி உள்பட ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்தியில் உருவான படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த மே 5ந் தேதி ரிலீஸ் ஆனது. இப்படம் வெளியாகும் முன்னே பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளை சந்தித்தது.

ஏனெனில் இதில் கேரளாவை சேர்ந்த இந்து பெண்களை இஸ்லாமிய நாடுகளுக்கு கூட்டிச்சென்று அங்கு மதமாற்றம் செய்து அவர்களை ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்து விடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது. அதோடு இது உண்மை கதை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதான் இபப்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 


பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இப்படத்தை தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆண் நீதிமன்றம் தடைவிக்க மறுத்து விட்டதால் இப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆனது.பாஜக ஆளும் மாநிலங்களில் கேரளா ஸ்டோரி படத்துக்கு வரிவிலக்கு விதிக்கப்பட்டது. மறுபுறம் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டன. இப்படி பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.


இந்நிலையில் அபுதாபியில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் கேரளா ஸ்டோரி படம் குறித்து பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது: நான் பிரச்சார படங்களுக்கு எதிரானவன். படத்தில் உண்மை கதை என்று குறிப்பிட்டால் மட்டும் அது உண்மை கதை ஆகி விடாது. நிஜத்திலும் அது உண்மையாக இருக்க வேண்டும். தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல. என கமல் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement