• Jul 24 2025

5000 கொடுத்து 5 கோடியை ஆட்டைய போட்டாரா தளபதி.? எல்லாமே அரசியல் பிசினஸுக்காவா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

அண்மை காலமாக சோசியல் மீடியாவை திறந்தாலே விஜய் பற்றிய செய்திகள் தான் வந்து விழுகிறது. லியோ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருக்கும் இவர் இப்போது தன்னுடைய அரசியல் நகர்வுக்கான வேலையையும் சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்.

இதுவே இந்த பரபரப்புக்கு காரணமாக இருக்கிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்வுக்காக மொத்தமாக அவர் 2.35 கோடி வரை இதற்காக செலவழித்திருக்கிறார். இதை தவிர்த்து வந்தவர்கள் பாதுகாப்போடு திரும்பிச் செல்லும் வரை தேவையான செலவுகளையும் அவரே செய்திருக்கிறார். இது ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையும் கவர்ந்துள்ளது.

அதிலும் மேடையில் அவர் நடந்து கொண்ட பண்பும், பேசிய பேச்சும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.அந்த வகையில் விஜய் தன்னுடைய அரசியல் ஆட்டத்தை பக்காவாக ஆரம்பித்திருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் இப்போது கதி கலங்கி போயிருக்கிறது. இது ஒரு புறம் இருந்தாலும் சிலர் இதை நெகட்டிவ் ஆகவும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி தன் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.


Advertisement

Advertisement