• Jul 25 2025

சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத பாடகி KS சித்ரா- ஏன் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது சூப்பர் சிங்கர் 9. மாகாபா ஆனந்த், பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்க நிகழ்ச்சியும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

அபிஜித், பூஜா, அருணா, பிரியா, பிரசன்னா என 5 பேர் இந்த சீசனில் இறுதிப்போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

கடந்த வாரம் Pre Finals நிகழ்ச்சி நடந்தது, இதில் பாடகி சித்ரா மற்றும் குப்புசாமி ஆகியோர் நடுவர்களாக வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரசன்னா ராம் படத்தில் இடம்பெற்ற ஆராரிராரோ என்ற பாடலை பாடி அனைவரையுமே எமோஷ்னல் ஆக்கிவிட்டார். பாடகி சித்ரா பேசும்போது, எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என கண்களை துடைத்துள்ளார்.

உங்கள் அம்மா கூட கண்கலங்கிதான் உக்கார்ந்து இருக்கிறார்கள். ரொம்ப ஃபீல் பண்ணி பாடுனீங்க. நிஜமாகவே உள்ளே எங்கோ தொட்டது என்றார் சித்ரா.

Advertisement

Advertisement