• Jul 23 2025

விஜய் நாயகிகளை பார்த்து இவ்வளவு மோசமாக கூறினாரா..? வாரிசு நடிகர் ஷாம் பேட்டியால் வெடித்த சர்ச்சை!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வரும் நடிகர் ஷாம் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடிகைகள் சிம்ரன் மற்றும் ஜோதிகாவை நடிகர் விஜய் குதிரைங்கன்னு சொன்னார் என அவர் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அஜித் ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து திட்டித்தீர்த்து வருகின்றனர்.இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரிசு படத்தில் விஜய்யின் சகோதரனாக ஷாம் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



அத்தோடு  வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களுமே ஒரே நாளில் நேரடியாக மோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாரிசு படம் ஜனவரி 12ம் தேதியும் அஜித்தின் துணிவு படம் அதற்கு ஒரு நாள் முன்னதாக ஜனவரி 11ம் தேதியே வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாளே அதிக வசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக துணிவு ஒரு நாள் முன்னதாக வெளியாகவுள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

துணிவு படம் பற்றி இயக்குநர் ஹெச். வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் என அந்த படத்தை ப்ரமோட் செய்ய பேட்டி அளித்து வருகின்றனர். இன்னொரு புறம் வாரிசு படம் குறித்து அதில் நடித்துள்ள நடிகர் ஷாம் அளித்துள்ள பேட்டி டிரெண்டாகி வருகிறது. அதாவது  துணிவு மற்றும் வாரிசு கிளாஷ் குறித்து விஜய் சொன்ன விஷயம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.



மேலும் அண்ணா துணிவு படமும் பொங்கல் ரிலீஸ்னு சொல்லிட்டாங்க என ஷாம் போன் போட்டு பேசியதுமே.. டேய் நல்ல விஷயம் தானே.. அவரும் நம்ம நண்பர் தானே.. ரெண்டு படமும் வரட்டும் ரெண்டும் நல்லா ஓடும் என விஜய் சொன்னதாக ஷாம் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது ஷாம் விஜய் பேசியதாக சொல்லி உள்ள இன்னொரு விஷயம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

விஜய்யின் குஷி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஷாம் 12 பி படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் அந்த படத்தில் ஷாமுக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் சிம்ரன் நடித்திருந்தனர். அந்த சமயத்தில் ஷாமிடம் பேசிய நடிகர் விஜய் யாருடா நீ.. வரும்போதே ரெண்டு குதிரங்க சிம்ரன், ஜோதிகாவை ஓட்டிட்டு வரன்னு கேட்டார் என்று பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான சிம்ரன் மற்றும் ஜோதிகாவை நடிகர் விஜய் ஆஃப் ஸ்க்ரீனில் எப்படி பேசலாம் என அஜித் ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து விளாசி வருகின்றனர். இதன்மூலம் சமூக வலைதளங்களில் விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை வெடித்துள்ளது.

நடிகை ஹீராவுக்கும் அஜித்துக்கும் இடையே ஏற்பட்ட காதல் கிசுகிசுகளை வைத்தும், மங்காத்தா படத்தில் அஜித் கெட்டவார்த்தை பேசும் வசனத்தை ஷேர் செய்தும் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.மேலும்  நடிகர் ஷாம் ஓப்பனாக பேசுகிறேன் என உளறிவிட்டார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement