• Jul 24 2025

இம்சை யாரு?.. கொளுத்தி போடுறது இவரு தான்!!"- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குயின்சி கொடுத்த அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டுக்குள் தற்பொழுது  சினிமா கதாபாத்திரங்களாக மாறி போட்டியாளர்கள் டாஸ்க் ஆடி வருகின்றனர்.இந்த டாஸ்க் விறுவிறுப்பில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் வெளியேறிய குயின்சி பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் பிக்பாஸ் வீட்டில் 'இம்சை' யார் என கேட்க, "என்னுடைய இம்சை ஷிவின் தான்" என்கிறார் குயின்சி. பாயும் புலி யார் என கேட்டதும், "விக்ரமன் குரல் கொடுப்பாரு" என குயின்சி சொல்கிறார். இதன் பின்னர், கொழுத்தி போடுறது யாரு என்ற கேள்விக்கு பதிலளித்த குயின்சி, "அமுதுவ சொல்லலாம்" என அமுதவாணனை குறிப்பிட்டு குயின்சி பதில் சொல்கிறார்.


பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்து குயின்சி சொன்ன பதில்கள் தற்போது பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. மேலும் இது தவிர ஜனனியுடன் நடந்த சண்டை குறித்தும், அசல் மாறும் நிவாஷினி ஆகியோர் குறித்தும், தனது தந்தை ஸ்தானத்தில் பிக்பாஸ் வீட்டில் வலம் வந்த ராபர்ட் மாஸ்டர் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவலை குயின்சி பகிர்ந்துள்ளார். 

அத்தோடு இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாகக் காணப்படுகின்றது.

Advertisement

Advertisement