• Jul 24 2025

விஜய்யின் குடும்பம் மூன்றாக பிரிந்ததா? உண்மையை உடைத்த பிரலம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக வலம் வருபவர். விஜய் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்.

மேலும் இவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் தான் இலங்கையைச் சேர்ந்த சங்கீதா. விஜய்- சங்கீதா தம்பதிகளுக்கு திவ்யா சாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.

எனினும்  தற்போது விஜய் பற்றிய பல தகவல்கள் அதிகம் வைரலாகி வந்துக் கொண்டிருக்கின்றது.

முதன் முதலாக தந்தையுடன் வாக்குவாதம் ஏற்பட்டு தந்தையை கண்டுக் கொள்ளாமல் இருப்பதாகவும் பின்னர் விஜய் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் இதனால் சங்கீதா அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு லண்டனில் செட்டிலாகி விட்டதாகவும் தகவல்கள் பரவி வந்துக் கொண்டிருந்தது.

இவ்வாறுஇருக்கையில் விஜய் குறித்து எழும் வதந்திகள் பற்றி பேட்டி ஒன்றில் உண்மைகளை கூறியிருக்கிறார் விமர்சகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்து விட்டதாக வந்த செய்திகளில் துளி கூட உண்மை இல்லை. அவர்கள் இப்போதும் ஒன்றாகத் தான் இருக்கிறார்கள். தொலைபேசியில் கூட பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லை விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையில் போய்க்கொண்டு இருப்பது சின்ன சின்ன சண்டைகள் தான் இது நாளடைவில் சரியாகி விடும்.விஜய்யின் குடும்பம் மூன்றாக பிரிந்ததா? உண்மையை கூறிய சர்ச்சை நாயகன்

அத்தோடு இந்த வதந்திகள் எல்லாம் விஜய்யை பிடிக்காதவர்கள் பரப்பிய வதந்திகள் மட்டும் தான் உண்மையில்லை எனக் கூறியிருக்கிறார்

Advertisement

Advertisement