• Jul 23 2025

ருத்ரன் பட வெற்றியை வித்தியாசமான முறையில் முதியோர் இல்லத்தில் கொண்டாடிய படக்குழு- ராகவா லாரன்ஸ் சொன்ன காரணம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


முன்னணி தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் தயாரித்து ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இரண்டாவது வாரமாக தமிழகம் எங்கும் நல்ல வரவேற்புடன் பல திரையரங்குகளில் ஓடிவருகிறது. 

இந்த வெற்றியை சென்னை அம்பத்தூரில் உள்ள ஆனந்தம் முதியோர் இல்லத்திற்கு இன்று சென்ற ராகவா லாரன்ஸ், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர், மற்றும் கலை இயக்குநர் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர், அங்கு வசிக்கும் சுமார் 300 மூத்த குடிமக்களுடன் உரையாடி அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினர். 'ருத்ரன்' திரைப்படத்தின் வெற்றியை அங்குள்ளவர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். 


நிகழ்ச்சியின் போது பேசிய ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார், ருத்ரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு திரைப்படத்தின் வெற்றியை இதுபோன்று பயனுள்ள முறையில் கொண்டாடுவது மிகுந்த மன மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாக கூறினார்.


இப்படத்தின் மையக்கருவே வயது முதிர்ந்த பெற்றோர்களை அவர்களது பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் விட்டு விடாமல் நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்பது தான் என்பதால் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுடன் திரைப்பட வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. 


'


Advertisement

Advertisement