• Jul 26 2025

ஆயிஷா எலிமினேஷன் ஆன போது விக்ரமன் அப்படி ஒரு செயலை செய்தாரா..? திட்டிய நெட்டிசன்களுக்கு ரசிகர்கள் கொடுத்த விளக்கம்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் சீசன்-6 இல்  ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். எனினும்  இதற்கு அடுத்த கட்டமாக அசல், அடுத்த வாரத்தில் ஷெரினா, பின்னர் மகேஸ்வரி, அடுத்து நிவாஷினி, அடுத்து ராபர்ட், அடுத்து குயின்ஸி என போட்டியாளர்கள் வெளியேறி இருந்தனர்.


இதனைத் தொடர்ந்து, வார இறுதியில் வந்த கமல்ஹாசன், போட்டியாளர்களின் கடந்த வார செயல்பாடு குறித்து பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இதற்கு மத்தியில், கடந்த வாரம் இரண்டு எலிமினேஷன்களும் இருந்த நிலையில், சனிக்கிழமை எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராம் வெளியேறி இருந்தார். இதற்கடுத்து, அசீம், கதிரவன், ADK, ஜனனி, ஆயிஷா உள்ளிட்டோர் நாமினேஷன் பட்டியலில் இருந்தனர்.


மேலும் இதில், அசீம், ADK, கதிரவன் உள்ளிட்டோர் Save செய்யப்பட்டதாக கமல் அறிவிக்கவே, கடைசியில் ஜனனி மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் இருந்தனர். எனினும் அப்போது யார் வீட்டில் இருந்து வெளியேறுவார் என சக போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் கேட்க, அனைவருமே ஆயிஷா பெயரை தான் கூறினார்கள்.


இறுதியில் ஜனனி Save ஆவதாக அறிவித்த கமல் ஆயிஷா எலிமினேட் ஆவதாக கார்டில் பெயரை காட்டி அறிவிக்க, அனைவருமே கைத்தட்டினர். விக்ரமனும் கைதட்டியிருந்தார்.


அப்போது, “அவ்ளோ குஷியோ.. பரவால்ல” என ஆயிஷா சொன்னார். அந்த சமயத்தில், “விக்ரமன், நான் ஜனனி Save ஆனதுக்கு கைதட்டினேன்” என மெல்லியதான குரலில் கூறியிருந்த வீடியோ கிளிப்பை ரசிகர்கள் தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.அத்தோடு  பலரும் ஆயிஷா எலிமினேட் ஆவதாக அறிவித்தவுடன் விக்ரமன் கைத்தட்டுகிறார் என விமர்சித்து வந்த நிலையில், விக்ரமன் இப்படி சொல்லும் அந்த குறிப்பிட்ட டைம்லைன் கொண்ட வீடியோ கிளிப்பை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement