• Jul 25 2025

நீங்க கிளாமராக தொடர்ந்து நடிக்கலாம்...பூனம் பஜ்வாக்கு வந்த திடீர் ப்ரோபோசல்...அவரே சொன்ன விசயம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மேலும் அவர் தற்போது படங்களில் நடிப்பது குறைந்துவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் மிக மிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

பூனம் பஜ்வா தான் ஒரு பிரபல இயக்குரரை காதலித்து வருவதாகவும் சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


இவ்வாறுஇருக்கையில்  இன்ஸ்டாகிராமில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனக்கு திருமண ப்ரோபோசல் அனுப்பி இருந்ததாக பூனம் பஜ்வா தெரிவித்து இருக்கிறார்.

"உங்களை எனக்கு பிடித்து இருக்கிறது. திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு வயது குறைவாக இருக்கிறது. எனக்கு 21 வயதாகும் வரை காத்திருங்க. வயது வித்தியாசம் பிரச்சனை இல்லை. இப்போ ட்ரெண்ட் மாறிவிட்டது. எனது அம்மாவையும் convince செய்துவிட்டேன். அத்தோடு நீங்க கிளாமராக தொடர்ந்து நடிக்கலாம்" என அந்த மெசேஜில் அவன் குறிப்பிட்டு இருந்ததாக பூனம் பஜ்வா பேட்டியில் கூறி இருக்கிறார்.



அந்த மெசேஜுக்கு என்ன பதில் அளிப்பது என்று கூட எனக்கு தெரியவில்லை, அதனால் ரிப்ளை செய்யாமல் விட்டுவிட்டதாக அவர் கூறி இருக்கிறார். 


Advertisement

Advertisement