• Jul 24 2025

கதிரவனைத் தொடர்ந்து பணப் பெட்டியுடன் வெளியேறியது யார் தெரியுமா?- இத்தனை லட்சம் எடுத்துள்ளாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கதிரவன் 3 லட்சம் மதிப்புள்ள பணமூட்டையை தட்டி சென்றார். இந்நிலையில் பிக் பாஸ் இப்போது பணப்பெட்டியை வைத்துள்ளார். இதை யார் எடுக்கப் போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அதாவது அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது. ஆகையால் இவர்களுள் ஒருவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை அடிக்க உள்ளார். எனவே இவர்கள் மூவரும் தங்கள் மீது உள்ள நம்பிக்கையில் பணப்பெட்டியை எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை.மைனா நந்தினி மற்றும் அமுதவாணன் இவர்கள் இருவருக்கும் தான் போட்டி நிலவி வருகிறது.


 இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த ஜி.பி முத்து அசீம் தான் வெற்றி பெறுவார் என்று கூறினார். ஆகையால் அமுதவாணன் எப்படியும் பணப்பெட்டியை எடுத்து விட வேண்டும் என மும்மரம் காட்டி வந்தார்.அதன்படி 13 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை அமுதவாணன் எடுத்துள்ளார்.


கண்டிப்பாக பைனல் லிஸ்ட் ஆக அமுதவாணன் சென்றிருந்தால் இவ்வளவு தொகை கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இறுதிவரை சென்று பணப்பெட்டியை சாதுரியமாக தட்டி தூக்கி உள்ளார். கடந்த சீசன்களில் கேபி மற்றும் சிபி ஆகியோர் இதுபோன்று சிறப்பாக விளையாடி இருந்தார்கள்.அதேபோல் இந்த சீசனில் அமுதவாணன் அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

Advertisement