• Jul 25 2025

அந்த விஷயத்தில எனக்கு வெற்றி கிடைக்கல அது தான் உண்மை- அசீம் குறித்து பேசிய விக்ரமன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6-ல் முதல் முறையாக  இரண்டு தடவை பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இறுதிவரை சென்ற போட்டியாளர்கள் யார் வேண்டுமானாலும் பணத்துடன் வெளியேறலாம் எனவும் பிக்பாஸ் அறிவித்திருக்கிறார். இப்படி சுவாரஸிய நகர்வுகளுடன் சென்றுகொண்டிருக்கிறது இந்த சீசன்.

இந்நிலையில், விக்ரமன் மற்றும் மகேஷ்வரி இருவரும் கார்டன் பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது மகேஷ்வரி,"எல்லோரோடையும் அவர் கனெக்ட் ஆகிருக்காரு" என அசீம் பற்றி சொல்கிறார். அப்போது அவருக்கு பதில் அளிக்கும் விக்ரமன்,"இந்த வீட்ல அது நார்மலைஸ் ஆகிடுச்சு. அதுனால தான் நல்ல வேளை இந்த வீடு முடிஞ்சிடுச்சு-ன்னு தோணுது. இது சொசைட்டியா இருக்க கூடாதுன்னு நான் நம்புறேன்" என்கிறார்.


தொடர்ந்து பேசும் மகேஷ்வரி அதற்காக நாம் முயற்சிகள் எடுக்க கூடாதா? என கேள்வி எழுப்புகிறார். அப்போது விக்ரமன்,"இருக்க கூடாதுன்னு நான் விரும்புறேன். அதுக்கு என்ன ஸ்டெப் எடுக்கணுமோ அதை பண்ணவும் செய்வேன். இந்த வீட்ல நம்ம காலம் முடிஞ்சிடுச்சு. இந்த வீட்ல அதை நார்மலைஸ் பண்ண கூடாதுன்னு இறுதிவரை முயற்சி பண்ணோம். அதுல வெற்றி கிடைக்கல. அதுதான் உண்மை. இது சொசைட்டியா மாறிட கூடாதுங்குறது தான் என்னோட கவலை. டைட்டில் ஜெயிக்கிறது மட்டும் இல்ல" என்கிறார்.


மேலும், தனக்கு யாரையும் வெறுக்க தெரியாது எனவும் அவர்களிடம் உள்ள விஷயங்களை சரிசெய்யும்படி தான் கூறும் வழக்கம் கொண்ட ஒரு நபர் என்றும் விக்ரமன் கூறுகிறார். அப்போது விக்ரமன்,"கருத்தியல் ரீதியா எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. அவர் வெற்றிபெறணும்னு தானே இப்படி பண்ணிருக்காரு. அப்படி தான் நான் பார்க்குறேன்" என்று குறிப்பிட்டார்.


Advertisement

Advertisement