• Jul 23 2025

பல கோடி செலவழித்து புது அலுவலகத்தை வாங்கிய விஜய்... அதுவும் எங்கு தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் எப்போதுமே கொண்டாடப்பட்டு வருகின்ற உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் நாயகனாக திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர் 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார். 


மேலும் தற்போது இவரின் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு'  திரைப்படம் உருவாகி வருகின்றது. இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படமானது வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது. 

அதுமட்டுமல்லாது இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்த அப்டேட்டுகளும் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன.


இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் அலுவலகம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதாவது பெசன்ட் நகரில் இருந்த அவரின் பழைய அலுவலகத்தை தற்போது பட்டினப்பாக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி கட்டித்திற்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் அதில் 15-ஆவது தளத்தை முழுவதுவதாக விஜய் தன் அலுவலகத்திற்காக வாங்கியிருப்பதாகவும், அதன் விலை பல கோடிக்கு இருக்கும் என்றும் தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.  

Advertisement

Advertisement