• Jul 24 2025

சிம்புவை பார்க்கவில்லை: நான் Play Boy தான்.. விஷால் அதிரடி!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லத்தி படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

இருந்த போதிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார்.இந்நிலையில்தான் தமிழக Youtube சனல் ஒன்றுக்கு விஷால் வழங்கிய நேர்காணலில் தொகுப்பாளரான Vj பார்வதி பல கேள்விகளை கேட்டிருந்தார்.

அதற்கு மனம் திறந்து பேசிய நடிகர் விஷால் பல விடயங்களை பகிர்ந்தார்.அந்த வகையில் எனக்கு சினிமா நிகழ்வுகள் பிடிக்காது, சினிமா பார்ட்டி என்றாலே பயம்,  அவ்வளவு ஏன் என் பட ஓடியோ லோஞ்சுக்கே எனக்கு போக பிடிக்காது. 

நான் சினிமா நிகழ்வுகளுக்கு போகும் போது தலையை குனிந்துகொண்டு போவேன் அதை பார்க்கிற பெரியவங்க பாரு எங்களை மதிக்காமல் போறான் விஷால் என்பார்கள் ஐயோ சாமி ஆள விடுங்கப்பா என கூறினார். 

நான் சிம்புவை பார்த்து பல நாள் ஆகின்றது, சிம்புவின் AAA பட விவகாரம் தொடர்பில் கூட முழுமையாக எனக்கு தெரியாது ஏதோ பிரச்சினை போனது.

தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டாக பிரிந்திருக்கிறது தற்போது அவர்கள் எந்த நடவடிக்கைகளும் செய்யவில்லை,  எனக்கு நிறைய படம் இருக்கின்றது நடித்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.

தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் வரும் என்னுடைய கதாப்பாத்திரம் போலத்தான் நான், நான் ஒரு பிலேபாய்தான் என்றார். 

எனக்கும் வரலட்சும்மிக்குமிடையில் நல்ல நட்பு பலகாலமாக இருந்துவருகிறது, ஆனால் எங்களை பற்றி கிசு கிசு வருகின்றது அதை சொன்னால் போல விடவும் மாட்டார்கள் ஆனால் நாங்கள் நல்ல நண்பர்கள் என்றார்.இவ்வாறு தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் வெளிப்படையாக பதிலளித்திருந்தார்.

Advertisement

Advertisement