• Jul 25 2025

“அவருக்கு எதிராக பேசியதற்காக நான் தண்டிக்கப்பட்டேன் ..”- நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வில்லன் நடிகராக கலக்கி வருபவர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் வில்லனாக நடித்து பெயர்பெற்றவர் ஆவார். இவர் சினிமாவை தாண்டி அரசியல் விமர்சகராகவும் இருந்து வருகிறார். எனினும் குறிப்பாக மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதால், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டு உள்ளது. இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போரட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில், மோடிக்கு எதிராக பேசியதற்காக தனக்கு பாலிவுட்டில் இருந்து பட வாய்ப்புகள் தருவதில்லை என்கிற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். அத்தோடு பாலிவுட்டில் சிங்கம், வாண்டட் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் வில்லனாக நடித்து கலக்கிய பிரகாஷ் ராஜ், கடந்த 2018-ம் ஆண்டு மோடிக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட பின்னர் தனக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைப்பது நின்று போனதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக தமிழில் விஜய்க்கு வில்லனாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். இதற்கு அடுத்தபடியாக ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்திலும் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். அத்தோடு இப்படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இப்படத்தின் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement