• Jul 24 2025

வாரிசு படத்தால் பலத்த அடி வாங்கிய தில் ராஜு.. அட பாவமே.. நினைச்சது ஒண்ணு.. நடந்தது வேறு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்திருந்த திரைப்படம் தான் 'வாரிசு'. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படமானது பொங்கல் விருந்தாக ஜனவரி 11 ஆம் தேதி அஜித்தின் 'துணிவு' படத்திற்குப் போட்டியாக வெளியாகி இருந்தது.


மேலும் இந்தப்படம் வெளியாக முதலே, ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும்.. மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்று வந்தாலும் வாரிசு திரைப்படம் 30 நாட்களைக் கடந்து இன்றும் பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்த தகவல் வெளிவந்திருக்கின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வாரிசு படம் 147 கோடி வசூல் செய்துள்ளது. அதுமட்டுமல்லாது கேரளாவில் 12 கோடி, கர்நாடகாவில் 15.75 கோடி, தெலுங்கானா 25 கோடி, நார்த் இந்தியாவில் 16.26 கோடி மற்றும் வெளிநாடுகளில் 90 கோடி என பல கோடிகளை வாரிசு படம் வசூல் செய்துள்ளது.


அந்தவகையில் மொத்தமாக உலகம் முழுவதும் 306.01 கோடி இதுவரை வாரிசு படம் வசூல் செய்திருக்கிறது. மேலும் தில் ராஜு, வாரிசு படம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்றும் அதில் 50 கோடி ஷேர் கிடைக்கும் என்று ஏற்கெனவே கணித்திருந்தார். 

ஆனால் அவர் நினைத்த அளவிற்கு இல்லாமல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரிசு படம் பெரிய அடி வாங்கி உள்ளது. அதாவது அங்கு வாரிசு படம் 25 கோடி வசூலினை மட்டுமே செய்துள்ளது. இதில் 13 கோடி மட்டும் தான் தில் ராஜுக்கு ஷேர் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. 


மேலும் தமிழ்நாட்டின் விநியோகஸ்தரான லலித் தில் ராஜுவிடம் 60 கோடி வாரிசு படத்தை கொடுத்து வாங்கி இருந்தார். இதனையடுத்து மதுரை மற்றும் சென்னை போன்ற இடங்களை வேறு விநியோகஸ்தருக்கு லலித் விற்றிருந்தார். அந்தவகையில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு வாரிசு படம் மூலம் 4.35 கோடி லாபம் கிடைத்தது. இந்நிலையில் தமிழ்நாட்டு திரையரங்குகள் வாரிசு படத்தை ரிலீஸ் செய்ததன் மூலம் லலித்துக்கு 67 கோடி ஷேர் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இருப்பினும் இதில் ஏற்கனவே வாரிசு படத்தை லலித் 60 கோடி வாங்கி இருந்ததால் மீதம் உள்ள தொகை 7 கோடி மட்டும் தான். ஆனாலும் அதிலும் வாரிசு படத்தின் பிரிண்ட் மற்றும் விளம்பரத்திற்காக லலித் 5 கோடி பணத்தினை செலவு செய்துள்ளார். 


எனவே லலித்துக்கு வாரிசு படத்தின் மூலம் கிடைத்த லாபம் என்றால் வெறும் 2 கோடி ரூபாய் மட்டும் தான். இதன் மூலம் அவருக்கு பெரிய லாபத் தொகை என்று எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் விஜய் இந்த படத்தை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டதால் தான் லலித் வாரிசு படத்தை வெளியிட்டு இருந்தார். அந்தவகையில் தொகுத்துப் பார்த்தால் 100 கோடியினை எதிர்பார்த்த தில்ராஜுக்கு வாரிசு படம் மூலம் மொத்தமாக 38.50 கோடி லாபம் கிடைத்துள்ளமை தெளிவாகின்றது

Advertisement

Advertisement