• Jul 25 2025

கோலாகலமாக நடந்த சித்தார்த்- கியாரா திருமண வரவேற்பு நிகழ்வு- திரண்டு வந்த பிரபலங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானிக்கு நேற்று கோலாகலமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்த இவர்கள் இருவரும் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மரில் உள்ள சூர்யாகர் ஹோட்டலில் நடந்தது. சங்கீத் மற்றும் மெஹந்தி நிகழ்ச்சிகளுக்காக ஜெய்சால்மரின் சூர்யாகர் ஹோட்டலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர்களால் மண்டபம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமணத்தில் 100 விஐபிக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.


7ந் தேதி ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்ற நிலையில், சித்தார்த்தின் சொந்த ஊரான புது டெல்லியில் நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கியாராவும் சித்தார்த்தும் கைகளைப் பிடித்தபடி வரவேற்பறைக்குள் நுழைந்தனர். மணமகள் மரகதம் மற்றும் வைரங்கள் கொண்ட வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் கவுனை அணிந்திருந்தார். மணமகன் ஒரு பளபளப்பான கருப்பு நிற கோட்டில் அழகாக காணப்பட்டனர்.


வரவேற்பு நிகழ்ச்சிக்கு அண்மையில் குழந்தை பெற்ற ஆலியா பட் மினுமினுக்கும் சாம்பல் நிற புடவை அணிந்து வந்திருந்தார். ஆலியா பட்டும் சித்தார்த்தும் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோஹரின் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆலியாவின் கணவர் ரன்பீர் கபூர் வரவில்லை.


நடிகை கரீனா கபூர் பளபளக்கும் உடையில் கரண் ஜோஹருடன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். மேலும், கஜோல் மற்றும் அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன், ஷாஹித் கபூர் அவரது மனைவி மீரா ராஜ்புத், வித்யா பாலன் தனது கணவர் சித்தார்த் ராய் கபூருடன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.


கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவும் 2021 ஆம் ஆண்டு ஷெர்ஷா படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கினர். கியாரா அத்வானி கடைசியாக கோவிந்த நாம் மேராவில் விக்கி கௌஷலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சித்தார்த் மல்கோத்ரா நடித்த புதிய படம் மிஷன் மஜ்னு கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement