• Jul 26 2025

ஆயிஷா ஆம்பள மாதிரி பேசுவா கமல் சேர்கிட்ட திமிரா பேசல- நெத்தியடி பதில் கொடுத்த பிக்பாஸ் சாந்தி- நம்பிற மாதிரி இல்லையே

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் மூன்று பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்பொழுது 18 பேர் மாத்திரமே வீட்டுக்குள் உள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலாவதாக வெளியேறிய சாந்தி மாஸ்டர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் சாந்தி மாஸ்டர் தான் வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று எதிர்பார்க்கல. கரெக்டாக இருந்தோமோ அப்படி இருந்தும் எப்படி வெளியேறினேன் என்று தோனிச்சு. மேலும் என்னை விட சரியாக விளையாடாதவங்க வீட்டுக்குள்ளே நிறைய பேர் இருக்கிறாங்களே என்ற மைன்ட் அப்செட் இருக்கு என்றும் கூறினார்.


தொடர்ந்து வீட்டில் கமல்ஹாசனுடன் ஆயிஷா நடந்து கொண்ட விதம் குறித்து கேட்டபோது ஆயிஷா டக் என்று பேசிற ஆள் தான் அவ அப்படி தான் குறும்புத்தனம் நிறைய பண்ணிட்டே இருப்பா. அவளுக்கு அங்க அசீம் நடந்து கொண்ட விதத்தால கன்பியூஸ்ட் ஆகிட்டா அதன் பின் விளைவு இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கல. அவர் நல்ல ஸ்ரோங்கான போட்டியாளர் தான். அவளுக்கு கமல் சேர்கிட்ட எப்படி பேசணும் என்று தெரில.அவ ஆம்பள பையன் பேசிற மாதிரி பேசுவா. அசீமால் தெரியாமல் மாட்டிக்கிட்டோமா என்ற யோசனை தான் அவளுக்கு கமல் சேர் கிட்ட அவள் கோபமா பேசல. ஒரு உரிமையாத்தான் பேசினாள். அவளுக்கு புரியாம எல்லாம் இல்ல எத்தாத்தையும் யோசிக்காமல் பேசிட்டு அப்பிறம் தான் தனிய இருந்த யோசிப்பா அவள் டாப் 5ல வருவாள் என்று நம்புகின்றேன் என்றும் கூறினார்.


அதே போல அசீம் குறித்து பேசும் போது அசீம் பேசிற விஷயங்கள் சரியாகத் தான் இருக்கு ஆனால் அவர்  வார்த்தைகளை தவறாக விடுவதோடு ஒழுங்காகப் பேச தெரில. பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே ரொம்ப தைரியமானவர்தான் அசீம்.நான் வீட்டுக்குள்ளே இருக்கும் போதே அசீம் குரல் உயர்த்திப் பேசுவாரு அதனாலேயே பலர் அவர்பேசுவதையே மற்றவங்க சரி என்று சொல்லுவாரு நிறைய பேசுவாரு. கமல் சேர் கிட்டேயே நிறையப் பேசுவாரு. ஆனால் அவருக்க சரியாகப் பேசத் தெரில.ஆனால் அவர் கிட்ட தனியாப் பேசிப் பாருங்க சூப்பரான மனிதர் ரொம்ப தைரியம் அந்தத் தம்பிக்கிட்ட இருக்கு ஆனால் பேசத் தெரில என்றும் தெரிவித்தார்.


Advertisement

Advertisement