• Jul 26 2025

பிக்பாஸ் அசல் கோலாறு பாடிய ‘மேரா மாதா மர்கயா’ எனும் பாடல் குறித்து வெளியாகிய புதிய அப்டேட்- இந்த படத்துலயா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஜோர்த்தால’ எனும் பாடலை ஆடி பாடி, யூடியூப் தளத்தில் வெளியிட்டு படு பயங்கர பேமஸ் ஆனவர் தான் அசல் கோலாறு. இவர் இதனைத் தொடர்ந்து பல பாடல்களைப் பாடி இருந்தார். தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்குபற்றி வந்தார்.

இருப்பினும் அங்கு பெண் போட்டியாளர்களுடன் அவர் செய்த சில்மிஷ வேலைகளினால் சில நாட்களியேலே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இவர்  எழுதி பாடியுள்ள பாடலான ‘மேரா மாதா மர்கயா’ எனும் பாடல் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


அதாவது  பரோல் என்ற திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெறுகின்றது. பரோல் திரைப்படம் நவம்பர் மாதம் 21ம் திகதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படமானது அண்ணன் தம்பி இடையே நடக்கும் மோதல் பற்றிய கேங்ஸ்டார் படமாகவே அமைந்துள்ளது.


வியாசர்பாடியில் தொடங்கி திருச்சி, மதுரை சென்று விக்கிரவாண்டி சேலையூர் வரை படரும் இந்த கதை 48 மணி நேரத்தில் நடப்பதாக, க்ரைம் -த்ரில்லர்-ஆக்‌ஷன் கலந்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இப்படம் அரசியல் பேசும், அரசியல் அல்லாத படம் என்றும் இப்படத்தின் இயக்குநர் முன்னதாக தெரிவித்திருந்தார். 


Advertisement

Advertisement