• Jul 24 2025

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா

stella / 2 years ago

Advertisement

Listen News!

சிறுநீரக குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீண்டும் இயக்குநர் பாரதி ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 80களில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குநராக வலம் வந்தவர் தான் பாரதி ராஜா.இவருக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 15 நாட்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.


இதைத்தொடர்ந்து மீண்டும் ஏற்பட்ட  திடீர் உடல்நல குறைவு காரணமாக, இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியாகி உள்ள தகவலில், சிறுநீரகக் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இயக்குநர் பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தத் தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement