• Jul 26 2025

''பேச முடியாத விஷயங்களை திரையில் பேசி உள்ளோம்'' - இயக்குநர் மோகன் ஜி-யின் வைரல் டுவீட்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பழைய வண்ணாரப்பேட்டை, 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் 'பகாசூரன்'. 

இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். 'பகாசூரன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதையடுத்து இப்படம்  அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குநர் மோகன் ஜி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். 

அதில், "பகாசூரன் Amazon prime ல் தற்போது.. குடும்பத்துடன் தயவு செய்து பாருங்கள்.. பேச முடியாத சில விஷயங்களை திரையில் பேசி உள்ளோம்.. நிச்சயம் சில வகையான தவறுகளில் சிக்கி கொள்ளமல் இருக்க இந்த திரைப்படம் உதவும்.. தெரிந்தவர்களையும் பார்க்க சொல்லுங்கள் நன்றி என பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement