• Jul 25 2025

அஜித்தின் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க விஜய் வந்ததற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?- ஆமாம்ல இதை யோசிக்கவே இல்லை

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணிய ம்நேற்று  காலை இயற்கை எய்தினார். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்த நிலையில், நேற்று அதிகாலை தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 85. அஜித் தந்தையின் மறைவுச் செய்தி அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்படம் ஏராளமான அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அஜித் தந்தையின் உடன் தகனம் செய்யப்பட்டது. தந்தையின் உடலை சுமந்து சென்ற நடிகர் அஜித், அங்கிருந்தவர்களிடம் வீடியோ எடுக்க வேண்டாம் என கைகூப்பி கேட்டுக் கொண்டார். அஜித் அங்கு வருகை தந்ததை அறிந்து ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பும் போடட்டப்பட்டது.


தந்தையின் உடலை தகனம் செய்துவிட்டு வீட்டுக்கு சென்ற நடிகர் அஜித்தை, நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். தந்தையை இழந்து வாடும் அஜித்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.


இந்த நிலையில் அஜித்தின் வீட்டிற்கு விஜய் எதற்காக வந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தும் விஜய்யும் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்து இரண்டு பேரும் நண்பர்களாக இருக்கின்றனர். தற்பொழுதும் அப்படித் தான் இருக்கின்றார்கள். ஆனால் ரசிகர்கள் தான் தமக்கிடையில் மோதலில் ஈடுபடுகின்றார்களே தவிர அவர்கள் இருவரும் நண்பர்கள் தான். ஆனால் விஜய் வந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்று தான் என தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement