• Jul 24 2025

குடும்பத்துடன் சுற்றுலாவுக்குச் சென்ற இயக்குநர் ஷங்கர்- ரசிகர்களிடம் வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.  


மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்தார். இந்த படத்தில்  ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்தனர். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.


விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அதிதி ஷங்கர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் நகருக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை அதிதி ஷங்கர் பகிர்ந்துள்ளார்.


 இயக்குநர் ஷங்கர், அவரது மனைவி ஈஸ்வரி & மகன் அர்ஜித் ஆகியோர் இந்த சுற்றுலாவில் அங்கம் வகித்தனர். மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் இந்த சுற்றுலாவில் இடம் பெறவில்லை. இதனால் அவரை மிஸ் செய்வதாக அதிதி ஷங்கர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement