• Jul 23 2025

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் 'கஸ்டடி’- வைரலாகும் கீர்த்தி ஷெட்டியின் கேரக்டர் லுக் போஸ்டர்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புது வருடத்தை ஒட்டி வெளியான படத்தின் க்ளிம்ப்ஸில் நாக சைதன்யாவின் அசுரத்தனமான கதாபாத்திர அவதாரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.


தற்போது படப்பிடிப்பு அதனுடைய கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. படத்தில் கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரத்தை ரேவதி என படக்குழு அறிவித்துள்ளது. அவரது கதாபாத்திரத்திற்கான முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு, ‘அழகும் திறமையும் சேர்ந்த கீர்த்தி ஷெட்டி ‘கஸ்டடி’ படத்தில் ரேவதி கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.  


இந்த போஸ்டர் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டி கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரம் கதையில் எந்த அளவுக்கு வலுவானதாக இருக்கப் போகிறது என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.  அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க, ப்ரியாமணி வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார், சம்பத்ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் மற்றும் பலர் நடிக்கின்றனர்.


நாகசைத்தன்யா இதுவரை கதாநாயகனாக நடித்தப் படங்களிலேயே ‘கஸ்டடி’ அதிக பொருட்ச்செலவில் உருவாகி வரும் படம். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவு மற்றும் தொழில்நுட்ப தரத்துடன் இந்தப் படம் தயாராகி வருகிறது. உலகம் முழுவதும் ’கஸ்டடி’ திரைப்படம் திரையரங்குகளில் மே 12, 2023-ல் வெளியாகிறது.


Advertisement

Advertisement