• Jul 24 2025

ஹவுஸ்மேட்ஸிற்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ்- கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு- நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டதால் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.இறுதிப் போட்டிக்கு 6 பேர் தகுதிப் பெற்ற நிலையில் கதிர் மட்டும் பண மூட்டையுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேறினார்.இந்நிலையில் விக்ரமன், அசீம், ஷிவ்ன், அமுதா, மைனா என 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரேஸில் பயணித்து வந்தனர்.


பிக் பாஸ் இறுதி வாரம் என்பதால் ஏற்கனவே எவிக்சன் செய்யப்பட்ட ஹவுஸ்மேட்ஸ் மீண்டும் வீட்டுக்குள் வந்திருந்தனர். அப்போது சில சுவாரஸ்யமான சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அரங்கேறின. இதனையடுத்து நேற்றில் இருந்து பைனலிஸ்ட்கள் தவிர ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் வீட்டில் இருக்கும் பைனலிஸ்ட்களுக்கு பிக் பாஸ் அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி வருகிறார்.அmதன்படி நேற்றைய தினம் என்ன நடந்தது என்று பார்ப்போம்.


அதாவது ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் வீட்டில் நடந்த காமெடியான விடயங்களை சிறுசிறு வீடியோவாக போட்டுக் காட்டினார். தொடர்ந்து அமுதவாணன் மட்டும் கார்டன் ஏரியாவுக்கு வருகிறார். பிக் பாஸ் வீட்டில் இதுவரை அவர் விளையாடிய புகைப்படங்களுடன் நடுவில் இருக்கும் ஸ்டேஜில் நிற்க வைத்து அவரை புகழ்கிறார்.அதனை ஆச்சரியத்துடன் அமுதவாணன்  பார்க்கிறார். அப்போது பேசும் பிக்பாஸ்,"இந்த வீட்ல நீங்க வாழ்ந்த நாட்கள், செஞ்ச டாஸ்க் இதோட நினைவுகளாக பொருட்கள் வைக்கப்பட்டிருக்கு. உங்க மனசுல வேணும்னா நீங்க ஒரு காமெடியன் தானேன்னு நெனச்சிருக்கலாம். என்னை பொறுத்தவரைக்கும் என் அமுது ஒரு முழு கலைஞன்" என்கிறார். இதனை கண்கலங்கியபடி கேட்டுக்கொண்டிருக்கும் அமுது நன்றி பிக்பாஸ் என கைகூப்பியபடி சொல்கிறார். இதனை போட்டியாளர்கள் அனைவரும் நெகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.


இவரைத் தொடர்ந்து நந்தினியை ஸ்டேஜில் ஏற்றி அவருக்கு புகழ்மாலை சூட்டுகிறார்.இதனால் இதனை கண்டு ஆச்சரியப்படும் மைனா, நெகிழ்ச்சியுடன் அந்த இடத்தை சுற்றிப்பார்க்கிறார். அப்போது,"நம்மள சுத்தி இருக்கிற 4 பேர் முடிவு எடுக்க கூடாது. நம்ம எப்படி வாழணும்னு. நம்ம தான் டிசைட் பண்ணனும். என்னால முடியும்னு நம்பிக்கை இருந்தது" என்கிறார். அப்போது பேசும் பிக்பாஸ்,"இந்த மைனா எல்லா கவலைகளையும் களைந்து சுதந்திரமாக பறக்க எனது வாழ்த்துகள்" என்கிறார். இதனை மைனா கண்கலங்கியபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்.


இவர்கள் இருவரும் கண்ணீரில் மூழ்கியிருந்ததோடு தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பிக்பாஸிற்கு தெரிவித்தனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்ததைக் காணலாம்.


Advertisement

Advertisement