• Jul 26 2025

அர்னவ் சித்திரவதையை தொடர்ந்து... கண்ணகியாய் மாறித் தத்துவ மழை பொழியும் திவ்யா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கேளடி கண்மணி’, ‘மகராசி’ ஆகிய தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த விடயம் என்றால் அது திவ்யா-அர்னவ் கதை தான். அதாவது சீரியல் நடிகர், நடிகை நிஜக் கதையும் சீரியல் போலத்தான் கிளாமராகவும், சஸ்பென்ஸாகவும் இருக்கும் போல என்று நினைக்கும் அளவுக்கு இருக்கிறது திவ்யா-அர்னவ் கதை.


அதாவது திவ்யா கன்னடத்து பைங்கிளி ஆவார். அதேபோன்று அர்னவ் தமிழர். இவர்கள் இருவரும் 5 ஆண்டுகள் காதலித்த நிலையில் திருமணமும் செய்து கொண்டனர். திருமணத்தின் போது நடிகை திவ்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் திவ்யா, கணவர் அர்னவ் மீது போலீஸில் புகார் ஒன்றினைக் கொடுத்திருந்தமை அனைவரும் அறிந்த ஒரு விடயம். அதாவது அர்னவ் தன்னை கட்டாய மதமாற்றம் செய்தார்.

திருமணம் செய்து தாயாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டார். குடும்ப வன்முறையில் ஈடுபட்டார் என்றெல்லாம் அடுக்கடுக்காக அர்னவ் மீது போலீஸில் புகார் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீஸார் அர்னவ்வை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பதிவு ஒன்றினை இட்டிருக்கின்றார். அதாவது "பெண்களை உலகிற்கு பொருத்தமாக மாற்றுவது பற்றி யோசிக்காதீர்கள், உலகத்தை பெண்களுக்கு ஏற்றதாக மாற்றுவது பற்றி சிந்தியுங்கள்" எனத் தனது புகைப்படத்தினைப் பதிவு செய்து அதற்கு கீழே கண்ணகி போன்று குறிப்பிட்டிருக்கின்றார்.


இவரின் இந்தப் பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement