• Jul 25 2025

நடிகர் அரவிந்த்சுவாமியின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?- வெளியாகிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 90களில் சோக்லேட் பாய் என்னும் அழைக்கப்பட்டு வந்த நடிகர் தான் அரவிந்த் சாமி. இவர் ரஜினி, மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி படத்தில் அர்ஜுன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானார்.

பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் சில காலம் சினிமாவை விட்டு விலகியிலுந்த இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் படத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா நடித்த கஸ்டடி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.காயத்ரி என்பவரை முதல் திருமணம் செய்துகொண்ட அரவிந்த் சாதி 16 வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்றார். அதன்பின் அபர்ணா முகர்ஜி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.


இந்த நிலையில் இவர் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கும் அரவிந்த் சாமிக்கு ரூ. 160 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement