• Jul 26 2025

வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்து வரும் 'அவதார் 2'... இதுவரை எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஒட்டு மொத்த உலக சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் என்றால் அது 'அவதார்' தான். அதாவது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹிட் திரைப்படம் தான் 'அவதார்'. அந்தவகையில் உலக சினிமாவில் இதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து, 23 ஆயிரம் கோடிகளை குவித்து உலகில் அதிகம் வசூல் ஈட்டிய திரைப்படம் தான் இது எனலாம்.


அதுமட்டுமல்லாது உலக சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு சில படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும். அப்படிபட்ட படங்களின் லிஸ்டில் முன்னிலையில் இருப்பது தான் அவதார், இப்படத்தின் உடைய முதல் பாக வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 15-ஆம் தேதி சில நாடுகளில் வெளியானது.


எது எவ்வாறாயினும் இத்திரைப்படம் நேற்று முன்தினம் தான் உலகம் முழுவதும் எல்லா நாடுகளில் வெளியாகி இருந்தது. அந்தவகையில் 25 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் நாளில் இந்திய மதிப்பில் ரூ. 800 கோடி வரை  வசூலித்திருந்தது. அதிலும் இந்தியாவில் மட்டுமே ரூ. 55 கோடி வரை வசூலித்தது என சொல்லப்பட்டது.


இந்நிலையில் இப்படம் வெளிவந்த நேற்றுடன் மூன்று நாட்கள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 3,500 கோடி வரை வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement