• Sep 09 2025

வசூலில் 'ஜெயிலர்' செய்த மாபெரும் சாதனை... எத்தனை கோடி தெரியுமா... அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்த இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.


மேலும் இவர்களுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படமானது வெளியான நாளிலிருந்து இன்றுவரை வசூலை வாரிக் குவித்த வண்ணம் தான் இருக்கின்றது. 


இந்நிலையில் 'ஜெயிலர்' திரைப்படம் இதுவரை பெற்ற வசூல் நிலவரத்தினை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் இதுவரையில் 525கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

Advertisement