• Jul 23 2025

சிக்கலில் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா... அதிகாரிகளால் அனுப்பப்பட்ட திடீர் நோட்டீஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ள ஒரு விடயம் என்றால் கொடைக்கானலில் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து நடிகர் பாபி சிம்ஹாவும், பிரகாஷ் ராஜும் சொகுசு பங்களா கட்டி வருவதாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள புகார்கள் தான்.


அதாவது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை பாரதி அண்ணாநகர் பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் அரசு அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாகவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிமிண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் பிரகாஷ் ராஜ் மீது புகார் எழுந்துள்ளது.


அதேபோன்று குறித்த பகுதியில் நடிகர் பாபிசிம்ஹாவும் அரசு அனுமதியின்றி 3 மாடி கட்டிடம் கட்டி வருவதாக மற்றுமோர் புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களின் நிலங்களை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் தற்போது மேற்குறித்த புகார்களின் அடிப்படையில் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் இருவருக்கும் வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement