• Jul 25 2025

தமிழை விடுத்து ஹிந்திக்கு தாவிய அமலாபால்... அந்தப் படத்திற்காக அங்கு எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால் விவாகரத்திற்குப் பின்னர் தனித்தே வாழ்ந்து வருகின்றார். 

இருப்பினும் இதன்பின் சுதந்திர பறவையாக மாறிய அமலா பால், மது பார்ட்டி, போட்டோஷூட், அவுட்டிங் என்று உல்லாசமாக இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாது கவர்ச்சியையும் கொஞ்சம் தூக்கலாகவே காட்டி வருகின்றார்.


மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற அமலாபால் தொடர்ந்தும் பல படங்களிலும் நடித்த வண்ணம் தான் இருக்கின்றார்.


இருப்பினும் தமிழில் இவருக்கு பட வாய்ப்புக்கள் குறைந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் கடாவர். இப்படமும் நேரடியாக ஓடிடியில் தான் வெளிவந்திருந்தது.  இதனையடுத்து 'அதோ அந்த பறவை போல' எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் இன்னும் வெளிவரவில்லை.


இவ்வாறாக இவரின் மார்க்கெட் குறைந்தமையினால் தற்போது ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். அந்தவகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த 'போலோ' திரைப்படத்தில் நடிப்பதற்காக  அமலா பால் ரூ. 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.


Advertisement

Advertisement