• Jul 24 2025

மஞ்சு வாரியர் காரை விடாமல் துரத்திய இளம் பெண்.. காரை விட்டு இறங்கி என்ன செய்தார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 சமீபத்தில் குல தெய்வம் கோயிலுக்குச் சென்ற நயன்தாரா உடன் செல்ஃபி எடுக்க முயலும் போது இளம் ரசிகை ஒருவர் நயன்தாரா தோளில் கை வைக்க அவர் முறைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறுஇருக்கையில் , நடிகை மஞ்சு வாரியரின் காரை இளம் பெண் ஒருவர் விடாமல் துரத்த காரில் இருந்து இறங்கி நடிகை மஞ்சு வாரியர் செய்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.சினிமா பிரபலங்களை பக்கத்தில் பார்த்தால் உடனடியாக ரசிகர்கள் அவர்களுடன் நெருங்க முயல்வதும் பேச முயல்வதும் இயல்பாகவே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ரசிகையை முறைத்த நயன்தாரா: கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து அவரது குல தெய்வ கோயிலுக்கு சமீபத்தில் நடிகை நயன்தாரா சென்றிருந்தார். எனினும் அப்போது லேடி சூப்பர்ஸ்டார் நம்ம ஊரிலா என ஆச்சர்யப்பட்ட பல இளம் ரசிகைகள் அவருடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்தனர்.

அப்போது ஒரு இளம் பெண் நடிகை நயன்தாரா தோளில் கைப்போட்டு செல்ஃபி எடுக்க முயற்சி செய்ய உடனடியாக திரும்பி அந்த பெண்ணை முறைத்த நயன்தாரா செல்போனை தூக்கிப் போட்டு உடைத்து விடுவேன் என்று திட்டியதாக பரபரப்பு தகவல்கள் கசிந்தன. அத்தோடு, கோயிலிலும் தயவு செஞ்சு சாமி கும்பிட விடுங்க என கடுகடுத்துள்ளார் நயன்தாரா.

மஞ்சு வாரியரை துரத்திய இளம் பெண்: மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் மஞ்சு வாரியர் தமிழில் தனுஷ் உடன் அசுரன், மற்றும் இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

எனினும் சமீபத்தில், எர்ணாகுலத்தில் நடைபெற உள்ள ஒரு விழாவுக்கு சென்ற மஞ்சு வாரியர் காரில் போய்க் கொண்டிருக்கும் போது, இளம் பெண் ஒருவர் மஞ்சு வாரியர் தான் காரில் செல்கிறார் என்பதை அடையாளம் கண்டு கொண்டார். பின்னர், மஞ்சு வாரியர் காரை தொடர்ந்து சென்று மடக்கி இருக்கிறார்.

 இளம் பெண் ஒருவர் தொடர்ந்து தனது காரை பின் தொடர்வதை கவனித்த நடிகை மஞ்சு வாரியர் தனது டிரைவரிடம் சொல்லி உடனடியாக காரை நிறுத்த வைத்தார். கார் கண்ணாடியை இறக்கிய மஞ்சு வாரியர் அந்த இளம் பெண்ணை பார்த்து சிரித்து விட்டு ஏம்மா இப்படி ஃபாலோ பண்ற, உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என்ன பண்றது என அட்வைஸ் பண்ணி உள்ளார்.

எங்க அம்மா உங்களோட பெரிய ஃபேன், அவங்களுக்கு இன்னைக்கு பிறந்தநாள், ஒரே ஒரு விஷ் பண்ண முடியுமா என அந்த இளம் பெண் மஞ்சு வாரியரிடம் கேட்க, உடனே அந்த பெண்ணின் அம்மாவின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு நிச்சயம் பேசுகிறேன் என வாக்கு கொடுத்துள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.அத்தோடு  ரசிகர்களுக்காகத் தான் நடிகர்களே என்றும் ரசிகர்களால் தான் நடிகர்கள் என்பதையும் மஞ்சு வாரியர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார் என மஞ்சு வாரியரின் ரசிகர்கள் அந்த வீடியோ காட்சிகளை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement