• Jul 25 2025

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் தனலக்ஷ்மிக்கு கிடைக்க இருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் டைட்டிலை வெல்லப்போது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்த வாரம் விக்ரமன், கதிரவன், அசீம், சிவின், ரச்சித்தா, மைனா நந்தினி, தனலக்ஷ்மி ஆகிய ஏழு பேரும் நாமினேஷனில் சிக்கினார்கள். இதன்படி மைனா நந்தினி அல்லது தனலக்ஷ்மி இவர்களில் யாரோ ஒருவர் தான் வெளியேறுவார் என்று கூறப்பட்டு வந்தது.


அதன்படி இந்த வாரம் தனலக்ஷ்மி தான் வெளியேறப்போகின்றார் என்பது உறுதியாகி விட்டது.தனலட்சுமி வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவரின் தெனாவட்டான பேசும், யாரையும் மதிக்காத தனமும் தான் என்றும், அவர் என்றைக்கோ வெளியில் சென்றிருக்க வேண்டும். 


ஆனால், அவரது திறமைக்காக கொடுத்த நல்ல வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு ரூ. 11 முதல் ரூ. 15 ஆயிரம் வரை ஒரு நாளைக்கு சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.


Advertisement

Advertisement