• Jul 24 2025

பாக்கியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய ஈஸ்வரி- அமிர்தா வீட்டுக்குச் சென்ற எழிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி

stella / 2 years ago

Advertisement

Listen News!


 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் மற்றும் பாக்யா இருவரும் எழிலின் பிரண்டோட பாட்டி இறந்து விட்டதாக பொய் சொல்லி அமிர்தா வீட்டுக்கு செல்கின்றனர்.

அவர்கள் வெளியே சென்றதும் செழியன் மற்றும் ஈஸ்வரி கோவிலுக்கு செல்வதாக பொய் சொல்லி விட்டு வர்ஷினி வீட்டுக்கு செல்கின்றனர். அடுத்ததாக எழில் மற்றும் பாக்யா அமிர்தா வீட்டிற்கு பேசப்போக அங்கு வீடு பூட்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். அக்கம் பக்கத்தில் விசாரிக்க அவர்கள் இருவரும் ஊருக்குச் சென்று விட்டதாக சொல்ல எழில் அதிர்ச்சி அடைகிறார்.


என்னுடைய காதல் அவ்வளவுதானா என கதறி அழ பாக்கியா அவனை சமாதானம் செய்கிறார். மறுபக்கம் ஈஸ்வரி வர்ஷினி வீட்டில் அவருடைய அப்பாவை பார்த்து பேச அவர் என் பொண்ணு எது கேட்டாலும் மறுப்பு சொல்ல மாட்டேன் எழில் நல்ல பையன் என்பதால் தான் இன்னும் சொல்லல. ஆனா எழிலுக்கு இதுல சம்மதமா என கேட்க அதெல்லாம் அவன் சம்மதிப்பான். எங்க குடும்பத்தோட வந்து பொண்ணு கேட்கிறோம் என ஈஸ்வரி வாக்கு கொடுத்துவிட்டு வருகிறார்.


பாக்கியா வீட்டுக்கு வந்ததும் செல்வி உன் மாமியார் ஏதோ சதி திட்டம் திட்டுறாங்க என சொல்ல ஜெனியும் பாட்டியும் செழியனும் ஏதோ ரகசியம் பேசுகிறார்கள் என சொல்ல பாக்கியா அதை நம்ப மறுக்கிறார். இத்துடன் இன்றைய  எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement