• Jul 24 2025

பொன்னியின் செல்வன் படத்திற்காக கார்த்தி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?- அடடே இவ்வளவு தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றியடைந்த சூழலில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ப்ரமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. இதில் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

 பட அறிவிப்பு வெளியானபோது, நாவலில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை யார் ஏற்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அந்த கதாபாத்திரத்தை கார்த்தி ஏற்றிருக்கிறார். துறுதுறுவென இருக்கும் வந்தியத்தேவனை கார்த்தி தனது நடிப்பின் மூலம் திரையில் கொண்டு வந்தார்.


இந்நிலையில் அவர் பொன்னியின் செல்வன் படத்துக்காக வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி கார்த்திக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த சம்பளம் ரொம்பவே கம்மியானது என தெரிவித்துவருகின்றனர்.

முன்னதாக கோவையில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, "ரொமான்ஸ் இல்லாமல் நீங்க கதையே நடிக்க மாட்டீர்களா என எனது மனைவி ரஞ்சனி கேட்டுக்கொண்டே இருப்பார். ஈரோடுக்காரர்கள் இப்படி இருந்தா என்ன பண்றது. ரொமான்ஸ் இல்லை என்றால் வாழ்க்கை போர் அடிக்காதா என்று சொன்னால்,நிஜத்தில் மட்டும்தான் உங்களுக்கு ரொமான்ஸ் வரவில்லை என கிண்டல் செய்வார்" என ஜாலியாக பேசினார். படத்தின் ப்ரோமோஷனில் கார்த்தியின் பேச்சு பலத்த வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement