• Jul 25 2025

''இருட்டு அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மேக்கப் ;பாத்ரூமில் டிரஸ்.''...மனம் திறந்த நடிகை குஷ்பு..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பூ. முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்த குஷ்பூ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, கமல் என 80களின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.

இப்போது அரசியல்வாதியாக இருந்தாலும் குஷ்பூ முன்னணி கதாநாயகியாக இருந்தபோது தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர்.

90களில் குஷ்பூ மிகவும் பிஸியான நடிகையாக இருந்தார். குறிப்பாக 1992ஆம் ஆண்டு மட்டும் அவர், "மன்னன், ரிக்‌ஷா மாமா, பாண்டித்துரை, சிங்காரவேலன், சேவகன், இது நம்ம பூமி, அண்ணாமலை, அம்மா வந்தாச்சு, நாளைய செய்தி, பாண்டியன் என மொத்தம் 10 தமிழ் படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.

இந்நிலையில் குஷ்பூ அளித்த சமீபத்திய பேட்டியில், "தெலுங்கு திரையுலகம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாறியதால்தான் தெலுங்கு படங்களில் அதிக அளவில் என்னால் நடிக்க முடியாமல் போனது. ஏற்கனவே என் குடும்பத்தாரை மும்பையில் இருந்து சென்னைக்கு வரவழைத்தேன். அவர்களை மீண்டும் ஹைதராபாத்தில் செட்டில் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தற்போது எல்லாம் மாறிவிட்டது. ஒரு காலத்தில் நாங்கள் இருட்டு அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மேக்கப் போட்டோம். பாத்ரூமில் உடை மாற்றினோம். மேக்கப் இல்லாதபோது மஞ்சள் பொடியை வைத்து முகத்தில் கலர் கரெஷ்கஷன் செய்தோம். கோவில் காட்சிகளுக்கு அது பெரிதும் கை கொடுத்தது. தற்போது கிராஃபிக்ஸ் இருக்கிறது. ஆனால் நாங்கள் ஒரிஜினலாக செய்தோம்.

 நான் நிறைய தெலுங்கு படங்களில் நடிக்க விரும்புகிறேன். கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்வேன். ஒரு கதாபாத்திரம் பத்து நிமிடங்களே வந்தாலும் கூட அது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். என்றார்.

Advertisement

Advertisement