• Jul 23 2025

நடிகர் சூர்யாவின் 42 படத்தின் பெயர் என்ன தெரியுமா?- சூப்பராக வெளியாகிய புதிய அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது அயராத முயற்சியினால் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கும் நடிகர் தான் சூர்யா.இவருக்கு அண்மையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்து. இதனை இவருடைய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வந்தனர்.அத்தோடு விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாப்பாத்திரமும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

இந்த நிலையில் இவர் நடித்து வரும் படங்களுக்கான மவுஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் இவர் பாலா நடிப்பில் வணங்கான் என்னும் படத்தில் நடித்து வந்தார். ஆனால் அப்படத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


இதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் முதற்கட்டப்படப்பிடிப்பானது  சென்னை புதுச்சேரி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து வெளிநாடுகளில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சூர்யா 42 படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பொங்கல் தினத்தில் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் சூர்யா ரசிகர்களுக்கும் இது ஒரு பொங்கல் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இப்படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement