• Jul 24 2025

விக்ரம் படத்தின் பாஃம் சீன் இப்படித் தான் எடுக்கப்பட்டதா?- பிக்பாஸில் ரகசியங்களைப் போட்டு உடைத்த மைனா நந்தினி

stella / 2 years ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம் வெளியாகி 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு இந்தப்படத்தில் மைனா நந்தினி மகேஷ்வரி ஷிவானி ஆகியோர் மூன்று மனைவிகளாக நடித்திருந்தனர். இவர்களில் மகேஷ்வரியும் மைனா நந்தினியும் தற்பொழுது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்குபற்றி வருகின்றனர்.


இதில் மைனா நந்தினி விக்ரம் படத்தில் இடம் பெற்ற  அந்த பாஃம் சீன் எப்படி படமாக்கப்பட்டது என்பது குறித்தும் விஜய்சேதுபதி நடிப்புக்காக என்னவெல்லாம் செய்வார் என்பது குறித்தும் இருவரும் மனம் திறந்து பேசியது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது விஜே மகேஸ்வரியும் அங்கே இருந்த நிலையில், அவரும் தனது அனுபவங்களை கூறினார்.

 அவர்கள் இருந்த வீடு ரியல் வீடு என்றும் விஜய்சேதுபதி போதைப் பொருள் உருவாக்கும் லேப் தனியாக செட் போட்டு எடுக்கப்பட்டது என்றும் கூறிய மைனா நந்தினி அதனை தொடர்ந்து அந்த பாம் சீன் எப்படி எடுக்கப்பட்டது என்பதையும் போட்டு உடைத்தார். சிங்கிள் ஷாட் தான் என சொன்ன நிலையில், சும்மா ஆக்‌ஷன் தான் பண்ணனும் என நினைத்தோம். கண்ணை மட்டும் மூடிக்கோங்க சொன்ன அவர்கள் வாயை மூட சொல்லல.. திடீரென கரிய புகையை முன்னாள் நின்று அடித்ததும் வாய்க்குள்ள எல்லாம் அது போய் பிரெண்ட்ஸ் பட வடிவேலு போல மாறிட்டோம் என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.


விஜய்சேதுபதி சும்மா டெம்பிளேட் நடிப்பை வைத்து ஓட்டுபவர் அல்ல, வில்லத்தனத்திற்காக ஒவ்வொரு மிருகத்தையும் அதன் அசைவுகளையும் பார்த்து கற்றுக் கொண்டு அதனை பல இடங்களில் விக்ரம் படத்தில் பயன்படுத்தி உள்ளார். ஒரு ஷாட்ல அவர் திரும்பி பார்க்கணும்.. சாதாரணமா திரும்ப மாட்டார்.. ஆந்தை கழுத்தை திருப்புவது போல திருப்பி பார்ப்பார் என்று விஜய்சேதுபதியின் நடிப்பு சீக்ரெட்டையும் கூறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement