• Jul 24 2025

bigg boss 7 நிகழ்ச்சியில் லேடி பிக்பாஸின் பெயர் என்ன தெரியுமா?- இந்த டுவிஸ்டை யாரும் எதிர்பார்க்கலையே....

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாரிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அதிலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.

அந்த வகையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது என்று கூறப்படுகின்றது. இதுவரை 7வது சீசனிற்காக 2 புதிய புரோமோக்கள் வெளியாகியுள்ளன, அதில் இந்த முறை 2 வீடு என்பதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.


மற்றபடி நிகழ்ச்சி குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் எந்த விவரமும் தெரியவில்லை.அத்தோடு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் 7வது சீசனிற்காக ரூ. 130 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க இந்த முறை பிக்பாஸ் வீடு மட்டுமல்ல பிக்பாஸாகவும் இரண்டு பேர் தான் இருப்பாங்களாம். வழமையாக பிக்பாஸாக ஆண் ஒருவரே குரல் கொடுத்து வருவதுண்டு. தற்பொழுது பிக்பாஸாக பெண் குரலில் பேசுபவருக்கு வாடர்ன் என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement