• Jul 25 2025

'சிட்டாடல்' வெப் சீரிஸ் பிரீமியர் ஷோவிற்கு சமந்தா அணிந்து வந்த ஆடையின் விலை என்ன தெரியுமா?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சமந்தா நடிப்பில் 'சாகுந்தலம்' படம் சமீபத்தில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இப்படமானது பெரும் தோல்வியையே சந்தித்தது. மேலும் திரைப்படங்களில் மட்டுமின்றி வெப் சீரிஸில் நடிப்பதிலும் சமந்தா கவனம் செலுத்தி வருகிறார்.


அந்தவகையில் அடுத்ததாக சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார். இது ஆங்கிலத்தில் உருவான ஒரு வெப் சீரிஸ் ஆகும். மேலும் இந்த வெப் தொடரானது ஹிந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது. அத்தோடு இதில் வருண் தவான், சமந்தா உள்ளிட்டோர் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கின்றனர். 


அத்தோடு ஃபேமிலி மேன், ஃபர்ஸி ஆகிய வெப் சீரிஸ்களை இயக்கி கவனம் ஈர்த்த ராஜ் & டிகே இந்த வெப் சீரிஸை இயக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிட்டாடல் ஆங்கில வெப் தொடரில் வரும் காட்சி ஒன்றில் நடிகை பிரியங்கா சோப்ரா ஆடை இல்லாமல் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார். அதேபோன்று சமந்தாவும் இதில் நடிக்கலாம் எனக் கூறப்படுகின்றது.


இந்நிலையில் நேற்றைய தினம் லண்டனில் நடைபெற்ற சிட்டாடல் வெப் தொடரின் பிரீமியர் ஷோவில் சமந்தாவும் கலந்து கொண்டிருந்தார். மேலும் இந்த ஷோவிற்காக மிகவும் கவர்ச்சியான உடையில் சென்றிருந்தார் சமந்தா.

அதாவது அழகான கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த உடைக்கு பொருத்தமான சில்வர் நகைகளையும் அணிந்து சென்றிருந்தார். இதனையடுத்து இந்த உடையின் விலை தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. கருப்பு நிறத்தில் மாடர்னாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உடை ஏறக்குறைய 68,000 ரூபாய் என்று அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement