• Jul 26 2025

திருமணம் செய்ய ஆசையில்லை... ஆனால் அது மட்டும் விருப்பம்.. நடிகை ஹனி ரோஸ் ஓப்பன் டாக்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல்யமானவராக இருப்பவர் தான் நடிகை ஹனி ரோஸ். மேலும் இவர் தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.


இந்நிலையில் தற்போது நடிகை ஹனி ரோஸ் தனது திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்தவகையில் அவர் கூறுகையில் தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை, ஆனால் தனது வாழ்க்கையில் ஒரு துணையை விரும்புகிறார் என ஓப்பனாக தெரிவித்து உள்ளார். 


அதுமட்டுமல்லாது திருமணம் செய்துகொள்வது தனக்கு பிரச்சனையாக இருப்பதால், வேறு ஒருவரின் திருமணத்திற்கு செல்வது தனக்கு பிடிக்கவில்லை எனவும், கல்யாணத்துக்குப் போனால் எல்லோருடைய பார்வையும் என் மேல் விழும், அதற்காக யாருடைய திருமணத்திற்கும் செல்லமாட்டேன். வேடிக்கைக்காக யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. தங்களிடம் பணம் இருப்பதைக் காட்டத்தான் திருமணம் என்று சொல்கிறார்கள்" எனவும் தெரிவித்துள்ளார்.


அத்தோடு "என் காதலை பலரிடம் சொல்லியிருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்து உள்ளன. எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. சிறுவயதில் இருந்தே எனக்கு அந்த ஆசை இல்லை" எனவும் ஓப்பனாக கூறி உள்ளார் நடிகை ஹனி ரோஸ்.

Advertisement

Advertisement